விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் படப்பிடிப்பு நிறைவு!
ஸ்லம் டாக் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது...
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ஸ்லம் டாக் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தெலுங்கு திரைப்பட இயக்குநர் புரி ஜெகன்நாத் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட்.
ஆக்ஷன் பாணி கதைக்களம் கொண்ட இப்படத்தில் தபு, சம்யுக்தா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Filming for the movie 'Slum Dog', starring actor Vijay Sethupathi, has been completed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.