FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாக்கெட் நாவல் திரைப்படத்திலிருந்து இளையராஜா விலகல்?

பாக்கெட் நாவல் படத்திலிருந்து இளையராஜா விலகியதாகத் தகவல்....

11 அக்டோபர் 2026, 2:40 pm IST
இசையமைப்பாளர் இளையராஜா
பகிர்:

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் பாக்கெட் நாவல் திரைப்படத்திலிருந்து இளையராஜா விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் “பாக்கெட் நாவல்”. ஏற்கெனவே, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் விடியோ வெளியிட்டு அறிவித்தனர். அதில், இப்படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட இளையராஜாவின் பெயர் இடம்பெறாமல் இருக்கிறது.

தகவலின்படி, இளையராஜாவுக்கும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இளையராஜா படத்திலிருந்து விலகிவிட்டாராம். மேலும், புதிய இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Reports have emerged that Ilaiyaraaja has opted out of the film Pocket Novel, directed by Thiagarajan Kumararaja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments