FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?

இயக்குநர் பாலாவின் புதிய திரைப்படம் குறித்து...

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலா.
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. சேது, நந்தா, பிதாமகன் என அடுத்தடுத்து சிறப்பான, அதிர்ச்சிகரமான திரைப்படங்களை இயக்கி பாலா படம் என்றாலே நன்றாக இருக்கும் என்கிற நம்பிக்கைகளைப் பெற்றார். சில தேசிய விருதுகள், மாநில விருதுகள், ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற கலைஞர் என பாலாவுக்கு இன்றும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

இறுதியாக, நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், கதையில் இருந்த சில அம்சங்களால் அப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பாலா புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் உறுதியானால், இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Reports indicate that actor Vijay Sethupathi is set to act under the direction of Bala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments