FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆனந்த் தேவரகொண்டாவின் எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எபிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

26 வினாடிகள் முன்பு
எபிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

எபிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா ஹாசன் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் எபிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர்.

பேபி படத்தில் இணைந்து நடித்த பிரபலமடைந்த ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஜோடி, எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர்' படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

90ஸ் - ஏ மிடில் கிளாஸ் பயோபிக் என்ற இணையத் தொடரை இயக்கிய ஆதித்யா ஹாசன், இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

அவரின் 90ஸ் - ஏ மிடில் கிளாஸ் பயோபிக் இணையத் தொடர் கதையின் தொடர்ச்சியாக எபிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

குடும்பத்தினரின் வற்புறுத்தால், உயர்கல்விக்காக லண்டனுக்குச் செல்லும் நாயகன், அங்கு ஒரு பெண்ணை காதலிக்கிறார். வாடகையைச் சேமிக்க இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் வாழ்வியல் போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 9 ஆம் தேதி வெளியாகிறது.

summary

The OTT release date for the movie Epic First Semester has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments