FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அனுபமாவின் கிரேஸி கல்யாணம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கிரேஸி கல்யாணம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

கிரேஸி கல்யாணம் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / பத்ரப்பா கஜுலா
பகிர்:

அனுபமா பரமேஸ்வரனின் கிரேஸி கல்யாணம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் தில்லு ஸ்கொயர் படத்தின் மூலம் பிரபலமான அனுபமா, அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, ஆரோ சினிமாஸ் தயாரிப்பில் பத்ரப்பா கஜுலா இயக்கத்தில் உருவான கிரேஸி கல்யாணம் என்ற படத்தில், அனுபமா பரமேஸ்வரன் பிரதான படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று, வணிக ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்தது.

நகைச்சுவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் அனுபமா நடித்துள்ளார். தருண் பாஸ்கர், விகே நரேஷ், அகில் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சுரேஷ் பொப்பிலி இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கிரேஸி கல்யாணம் திரைப்படம் நவ. 20 ஆம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது.

summary

The OTT release date for Anupama Parameswaran's film 'Crazy Kalyanam' has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.