FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பரிதாபங்கள் டிராவிட் செல்வத்தின் ட்ரோன்ஸ்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ட்ரோன்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக....

6 வினாடிகள் முன்பு
ட்ரோன்ஸ் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

பரிதாபங்கள் டிராவிட் செல்வம் நாயகனாக நடித்துள்ள ட்ரோன்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவற்றை பிரதானப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஜிஎம் மோர்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கடந்த அக். 16 ஆம் தேதி ட்ரோன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் நடிகைகள் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் டிராவிட் செல்வம், குரேஷி, சதீஷ், சசி செல்வராஜ், ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார். எஸ். ஆர். ஹரி இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ட்ரோன்ஸ் திரைப்படம் நாளை (நவ. 19) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

summary

The OTT release date for the film *Drones*, starring Dravid Selvam in the lead role, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.