2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, காதல் மற்றும் அந்தக் காலத்தின் இனிமையான நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.செல்போன்கள் பயன்பாட்டில் இல்லாத காலகட்டத்தில், வாக்மேன் உள்ளிட்ட இசைச் சாதனங்கள் வழியாக, நேரடி சந்திப்புகள் மற்றும் கடிதங்கள் மூலமாகவும் காதலர்கள் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட விதத்தை இப்படம் பேசுகிறது.அன்றைய இளைஞர்களின் காதல் உணர்வுகளையும், இசையோடு இணைந்த நினைவுகளையும் பிரதிபலிக்கும் வாக்மேன் போஸ்டரில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.