ராமாயணா அப்டேட்!
ரன்பீர், யஷ் நடிக்கும் ராமாயணா படத்தின் அப்டேட் வெளியானது...
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயணா படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்தியளவில் கிளாக்சிக் கதையாகக் கருதப்படும் ராமாயணத்தைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். அதன் முழுக்கதை மற்றும் கிளைக்கதைகள் திரைப்படங்களாகவும் சின்னத்திரை தொடர்களாகவும் உருவாகியிருக்கிறது.
ஆனால், பான் இந்திய சினிமா வணிகம், விஎஃப்எக்ஸ் வளர்ச்சிக்குப் பின் சரியான படங்கள் உருவாகவில்லை. பிரபாஸ் நடித்த ஆதி புருஷ் கடுமையான தோல்வியைச் சந்தித்திருந்தது.
Advertisement
Advertisement
தற்போது, இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படப்பிடிப்பு நிறைவு!
ranbir kapoor, sai pallavi, yash's ramayana movie glipse will out soon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.