FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்திய சினிமா இதுவரை பார்க்காத ஒன்று... ராமாயணா படத்தைப் பாராட்டிய காஜல்!

ராமாயணா படத்தைப் பாராட்டிய காஜல் அகர்வால்...

Updated On : 9 ஜூன் 2026, 12:07 pm IST
காஜல் அகர்வால், ரன்பீர் கபூர்
பகிர்:

நடிகை காஜல் அகர்வால் ராமாயணா படத்தைப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷும் நடித்து வருகின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோவில் மிகப் பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் வேலைப்பாடுகள், கம்பீரமான ரன்பீர் தோற்றம், பின்னணி இசை என அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ராமாயணாவுக்கு உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால், “ராமாயணா திரைப்படம் இதுவரை இந்திய சினிமா பார்க்காத தரத்தில் உருவாகி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகவே வித்தியாசமாகவும் புதுமையான அனுபவமாகவும் நடிகர்களுக்கு அமைந்தது. இதற்கு முன் இப்படியான அனுபவத்தை அடைந்ததில்லை.” எனக் கூறியுள்ளார்.

Actress Kajal Aggarwal has praised the movie Ramayana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments