2 படங்களின் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் கார்த்தி!
நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் குறித்து...
நடிகர் கார்த்தி இரண்டு திரைப்படங்களை முழுமையாக முடித்துள்ளார்.
நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் முக்கியமாக, நலன் குமாரசாமி இயக்கிய வா வாத்தியார் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களாகியும் திரைக்கு வராமல் இருக்கிறது.
அதேநேரம், தற்போது சர்தார் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து, கார்த்தி டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்திலும் அதன்பின் லோகேஷ் கனகராஜின் கைதி - 2 படத்திலும் நடிப்பார்.
Advertisement
Advertisement
மேலும், பிரபல தெலுங்கு திரைப்படத் தொடரான ஹிட் படத்தின் நான்காம் பாகத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தை சைலேஜ் கொலனு இயக்குகிறார்.
இப்படி, தொடர்ந்து வரிசையாகத் தன் படங்களின் வருகைக்காகக் காத்திருந்தாலும் இப்போது வா வாத்தியர், சர்தார் - 2 படங்களை எதிர்நோக்கியிருக்கிறார் கார்த்தி!
இதையும் படிக்க: கமல் ஹாசன் தயாரிப்பில் படம் இயக்கும் சு. அருண் குமார்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.