இதயம் - 2 தொடரின் நாயகி யார் தெரியுமா?
இதயம் - 2 தொடரில் நடிகை பல்லவி கெளடா நாயகியாக நடிக்கவுள்ளார்.
இதயம் 2 தொடரில் நடிகை பல்லவி கெளடா நாயகியாக நடிக்கவுள்ளார்.
முதல் பாகத்தில் நடிகை ஜனனி அசோக் குமார் நடித்து வந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பல்லவி நடிக்கவுள்ளார்.
இதயம் முதல் பாகத்தில் பாரதி என்ற பாத்திரத்தில் நடித்த ஜனனி அசோக்குமார், மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்தில் பாரதியாக யார் நடித்தாலும் ஈடு செய்ய முடியாது என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பல்லவி கெளடாவின் வருகை சவாலானதாகவே மாறியுள்ளது.
Advertisement
Advertisement
இதயம் 2 தொடரில் ஜனனி நடிக்கவில்லை என்ற அறிவிப்பு வெளியானதும், அத்தொடரில் நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
தற்போது இரண்டாம் பாகத்தில் பல்லவி கெளடா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இருந்த ரிச்சர்ட் ஜோஷ் நாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் ஒரு குழந்தை இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் இரு குழந்தைகளை வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முன்னோட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இதனிடையே இதயம் -2 தொடரில் நடிக்கும் பல்லவி கெளடா யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவர் ரிச்சர்ட் உடன் ஏற்கெனவே நடித்தவர்தான். தெலுங்கு மொழியில் 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பான நிண்டு நூரெல்லா சாவசம் தொடரில் ரிச்சர்ட் உடன் சேர்ந்து நடித்துள்ளார். அந்தத் தொடர் தெலுங்கில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
தற்போது தமிழில் இதயம் - 2 தொடரில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
2010 முதல் சின்ன திரையில் நடித்துவரும் பல்லவி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 20க்கும் அதிகமான தொடர்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
தற்போது இதயம் - 2 தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மற்ற மொழித் தொடர்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பல்லவி கெளடாவை, இதயம் -2 தொடரில் பாரதி பாத்திரத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் செயல் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், ஜனனி அசோக் குமாரை மறக்க வைப்பாரா? என ரசிகர்கள் பலர் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதயும் படிக்க | இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.