ஆதிரை Photo : Vijay TV
செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஆதிரை! இந்த வாரம் வெளியேறியது யார்?

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஆதிரை நுழைந்துள்ளதாகத் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் - 9 வீட்டுக்குள் மீண்டும் நடிகை ஆதிரை சென்றுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 8 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே, இந்த புதிய சீசனையும் தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன் உள்ளிட்ட 20 பேர் போட்டியாளர்களாக களம் இறக்கப்பட்டனர்.

தொடர்ந்து, வைல்டு கார்டு மூலம் திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜன், அமித் பார்கவ் ஆகிய 4 பேர் நுழைந்தனர். வைல்டு கார்டு போட்டியாளர்கள் வருகையால் போட்டி கடுமையானது.

ஒவ்வொரு வாரமும் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். அதன்படி, நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 பேர் உள்ளனர்.

இந்த வார வெளியேற்றத்திற்காக, சான்ட்ரா, ப்ரஜின், திவ்யா கணேஷ், கமருதீன், கனி திரு, எஃப்.ஜே., விக்ரம், அமித் பார்கவ், அரோரா சின்கிளேர், விஜே பார்வதி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இந்த வாரம் வெளியேற்றம் ஏதுவும் இல்லை(No Eviction) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னதாக வெளியேறிய நடிகை ஆதிரை மீண்டும் நிகழ்ழ்சிக்குள் சென்றுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. முன்னதாக ஆதிரை வெளியேறியபோது, அவர் சிறந்த போட்டியாளர், அவரை வெளியேற்றியிருக்கக் கூடாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் சென்றுள்ளார்.

நடிகை ஆதிரை வெளியே இருந்து விளையாட்டைப் பார்த்துவிட்டு, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதால், நிகழ்ச்சி மேலும் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

It is reported that Aadhir has re-entered the Bigg Boss house.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

SCROLL FOR NEXT