FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூன் 1 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Updated On : 1 ஜூன் 2026, 10:19 pm IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் - யூடியூப்
பகிர்:
Updated On : 1 ஜூன் 2026, 11:19 am IST

மோகனா உள்படவணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!

 சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 46 உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

Updated On : 1 ஜூன் 2026, 11:20 am IST
Updated On : 1 ஜூன் 2026, 11:20 am IST
Updated On : 1 ஜூன் 2026, 11:21 am IST

மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!

உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று(ஜூன் 1) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Updated On : 1 ஜூன் 2026, 11:21 am IST

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு! - ஐஐடி தில்லி மண்டலம் முதலிடம்!!

கடந்த மே 17 ஆம் தேதி நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மொத்தமாக 56,880 தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மொத்த தேர்வர்களில் 10,107 பேர் பெண் தேர்வர்கள் ஆவர்.

Advertisement

Advertisement

Updated On : 1 ஜூன் 2026, 11:22 am IST
Updated On : 1 ஜூன் 2026, 11:22 am IST

புதிய கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? இன்று தில்லி பயணம்!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இன்று தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Updated On : 1 ஜூன் 2026, 12:46 pm IST

தீ விபத்து!

தில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 1 ஜூன் 2026, 12:46 pm IST

ஆர்சிபி ரசிகர்களுக்கு அநீதி!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஜூன் 2026, 4:36 pm IST

திருச்சி தொகுதி என்றுமே என் இதயம்

தேர்தல் ஆணையத்திற்கு நான் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனால், திருச்சி தொகுதி என்றுமே என் இதயமாக இருக்கும் - திருச்சியில் விஜய் பேச்சு

Updated On : 1 ஜூன் 2026, 4:36 pm IST

கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார்கள் : விஜய்

6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று கூறினார்கள், ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார்கள் - திருச்சியில் விஜய் பேச்சு

Updated On : 1 ஜூன் 2026, 4:39 pm IST

நான் கோட் சூட் போடக் கூடாதா?

அதிகாரம் செய்பவர்களும் ஆதிக்கம் செலுத்துபவர்களும் மட்டும்தான் கோட் - சூட் போட வேண்டுமா? நாங்கள் போடக்கூடாதா?

என் கோட் சூட்டின் கருப்பு - வெள்ளை நிறம் யாரைக் குறிக்கும் என்று நன்றாகவே தெரியும் - திருச்சியில் விஜய் பேச்சு

Updated On : 1 ஜூன் 2026, 4:40 pm IST

தேர்தலுக்கு முன்பே திமுகவுக்கு வேலையில்லை

தேர்தலுக்கு முன்பே அவர்களுக்கு ஒரு வேலை கூட இல்லை. ஆனால் இப்போது சுத்தம். திமுகவும் மற்றும் பலரும் இணைந்து தவெக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என செய்த வேலைகள் கொஞ்சமா?

Updated On : 1 ஜூன் 2026, 5:22 pm IST

திமுக - தவெக இடையேதான் போட்டி

தமிழ்நாட்டில் திமுக - தவெக இடையேதான் போட்டி என்றும் தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்று திமுக நினைத்ததாகவும் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் கூறினார்.

Updated On : 1 ஜூன் 2026, 5:22 pm IST

சிங்கப்பெண் காவல் படை!

சிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்

Updated On : 1 ஜூன் 2026, 6:01 pm IST

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நடந்த பதவியேற்பு விழாவில், மேலும் 35 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Updated On : 1 ஜூன் 2026, 6:09 pm IST

ஏன், நாமெல்லாம் கோட் - சூட்லாம் போடக் கூடாதா? விஜய் கேள்வி

Updated On : 1 ஜூன் 2026, 6:25 pm IST

மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஜூன் 2026, 6:39 pm IST

பிறந்தநாளில் உருவாகிறது அண்ணாமலையின் புதிய கட்சி?

புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, பொறுமையாக உட்கார்ந்து 2 நாள்களில் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சி தொடங்கவில்லை என்று கூறாமல், 2 நாள்களில் பதில் அளிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளதால், ஜூன் 4 ஆம் தேதி பிறந்தநாளன்று அண்ணாமலை தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

Updated On : 1 ஜூன் 2026, 6:40 pm IST

ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழி

ஆட்சிக்கு வந்த பிறகும் முதல்வர் சி. ஜோசப் விஜய் திமுகவை குறை சொல்லிக்கொண்டு இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி இன்று (ஜூன் 1) விமர்சித்தார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் திமுக எம்.எல்.ஏ. அலுவலகத்தை கனிமொழி இன்று திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் கனிமொழி பேசியபோது, முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சு குறித்து பதில் அளித்த கனிமொழி, ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை முதல்வர் விஜய், திமுகவை குறை சொல்வதாக குற்றம் சாட்டினார்.

Updated On : 1 ஜூன் 2026, 7:22 pm IST

நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே வரும் ஜூன் 6 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருவதாகவும், நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, போராட்டம் நடத்த இருப்பதாகவும் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஜூன் 2026, 10:09 pm IST

நீட் தேர்வு: மீண்டும் வினாத்தாள் கசிந்தால் பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்!

நீட் மறுதேர்விலும் வினாத்தாள் கசிந்தால், நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ராஜிநாமாவைக் கோர வேண்டியிருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஜூன் 2026, 10:19 pm IST

இனி பொதுமக்களும் பிக் பாஸில் பங்கேற்கலாம்! பிக் பாஸ் காமன்மேன்!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் காமன்மேன் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால், நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாள்கள் போட்டியில் விளையாடலாம்.

Updated On : 1 ஜூன் 2026, 10:19 pm IST

அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திய ஈரான்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான அனைத்துத் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

லெபனான், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments