பிக் பாஸ் 10: நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம்! அதிமுக எம்.பி. இன்பதுரை
விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என இன்பதுரை தெரிவித்துள்ளது குறித்து...
நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், மறைமுகமாக நடிகர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வரும் நிலையில், இன்பதுரை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இம்முறை சட்டப் பேரவையை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது. ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.
இந்நிலையில், இந்த வார இறுதி நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
போட்டியாளரை நெறிப்படுத்த அவர் பேசியதாவது: ''தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை'' என்றார்.
மறைமுகமாக இப்பேச்சு முதல்வர் விஜய்யைச் சாடுவதாக இருப்பதாக பலரும் விஜய் சேதுபதியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
Let us stand by actor Vijay Sethupathi – AIADMK MP Inbadurai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.