முகப்பு
செய்திகள்

இயக்குநராகும் பிரபல இயக்குநரின் மனைவி! படப்பிடிப்பைத் துவங்கி வைத்த சூர்யா!

இயக்குநரான ஜித்து மாதவன் மனைவி...

Updated On : 5 ஏப்ரல் 2026, 6:25 pm IST
சூர்யாவுடன் நஸ்ரியா, இயக்குநர் ஷஃபினா பபின் பாக்கர் - x
பகிர்:

இயக்குநர் ஜித்து மாதவனின் மனைவி இயக்கும் புதிய திரைப்படத்தை சூர்யா துவங்கி வைத்தார்.

ரோமஞ்சம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக நடிகர் பகத் ஃபாசிலை வைத்து ஆவேஷம் திரைப்படத்தை இயக்கினார்.

இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ. 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. தற்போது, நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை ஜித்து மாதவன் இயக்கி வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜித்து மாதவனின் மனைவி ஷஃபினா பபின் பாக்கர் (Shifina Babin Pakker) இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதில், நடிகர் சூர்யா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன் படப்பிடிப்பையும் துவங்கி வைத்துள்ளார்.

நிகழ்வில் நடிகர்கள் நஸ்ரியா, சௌபின் சாகிர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Suriya joined the pooja ceremony for Director Jithu Madhavan's wife debut directorial movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.