நீக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகும் கருப்பு! எப்போது?
கருப்பு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நீக்கப்பட்ட காட்சிகளுடன் கருப்பு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் முதல் நாளிலிருந்து இதுவரை ஹவுஸ்ஃபுல் நிலையே தொடர்ந்து வருகிறது.
Advertisement
Advertisement
தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் கருப்பு திரைப்படம் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் 3 நாள்களில் உலகளவில் ரூ. 147 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கருப்பு படத்தில் யோகி பாபு, யூடியூப் பிரபலங்களான சதீஷ், தீபா, வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த காட்சிகள் திரையரங்குகளில் வெளியானபோது, இடம்பெறவில்லை.
இந்த நிலையில், நீக்கப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் 2 வது வாரம் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
It has been reported that the film Karuppu is set to be released on an OTT platform, featuring deleted scenes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.