ஓடிடியில் வெளியானது யூத்!
யூத் திரைப்படம் ஓடிடியில் வெளியானது குறித்து...
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யூத் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று(ஏப். 16) வெளியாகியுள்ளது.
நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் கடந்த மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தப் படம் ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் இணையத்தில் வைரலாகி ஹிட் அடித்தது.
இந்த நிலையில், யூத் திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The film Youth, which garnered the attention of fans following its theatrical release, has been released on an OTT platform today (April 16).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.