ஓடிடியில் வெளியான சூர்யாவின் கருப்பு!
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது தொடர்பாக..
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
ரசிகர்களின் அபாரமான வரவேற்பைப் பெற்று ரூ. 330 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இதுவரை வெளியான சூர்யா படங்களிலேயே அதிகம் வசூலித்த படமாக கருப்பு மாறியுள்ளது.
தமிழகத்திலேயே ரூ. 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்துடன் 1 கோடி டிக்கெட்கள் விற்பனையான சூர்யாவின் படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
இந்த நிலையில், கருப்பு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று(ஜூன் 12) வெளியாகியுள்ளது. இதன் தெலுங்கு வடிவமான வீரபத்ருடூ படமும் தற்போது காணக் கிடைக்கிறது.
Suriya's movie Karuppu on the OTT platform has been released on an OTT platform and is attracting the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.