முகப்பு
செய்திகள்

இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!

கர புரமோஷன் குறித்து...

Updated On : 24 ஏப்ரல் 2026, 5:29 pm IST
நடிகர் தனுஷ்
பகிர்:

நடிகர் தனுஷின் கர புரமோஷன் குறித்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உண்மைச் சம்பவத்துடன் தொடர்புடைய கதையாக எடுக்கப்பட்ட திரைப்படமான கர வருகிற ஏப். 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷின் 54-வது படமென்பதால் அவரின் ரசிகர்களுக்கும் ஆவல் அதிகரித்துள்ளது.

படத்தின் டிரைலர் காட்சிகளும் நம்பிக்கையூட்டும்படி இருப்பதால் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

ஆனால், கர திரைப்படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் போதுமான புரமோஷன்களை செய்யவில்லை என தனுஷ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் நேர்காணல் பேச்சுகள் பலரையும் ஈர்த்திருந்தாலும் அதனைப் படத்திற்கு ஏற்ப புரமோஷனாக மாற்றாதது; இசை வெளியீட்டை நேரடியாக ஒளிபரப்பாதது என கர வருவதே பலருக்கும் தெரியாத நிலை இருப்பதாக சமூக வலைதளங்களில் ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது.

முக்கியமாக, படத்தின் டிரைலர் வெளியாகி ஒருநாள் வரை 3 லட்சம் பார்வைகளைக் கூட தாண்டாத நிலை இருந்ததற்கும் தயாரிப்பு நிறுவனத்தின் மோசமான அணுகுமுறையே காரணம் என ரசிகர்கள் சாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Fans are complaining about actor Dhanush's car promotions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.