கவனம் பெறும் தனுஷ் - 55 தோற்றம்!
தனுஷ் - 55 தோற்றம் குறித்து...
நடிகர் தனுஷின் புதிய தோற்றம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இப்படத்தில் தனுஷ் உளவாளியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரில்லர் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் விடியோவில் ஃபங்க் சிகை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. முந்தைய படங்களில் அதிக முடியில்லாமல் நடித்த தனுஷ், தன் - 55வது படத்தில் புதிய தோற்றத்தில் உள்ளது அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actor Dhanush's new look has garnered attention among fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.