உளவாளியாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் - 55 திரைப்படம் குறித்து...
நடிகர் தனுஷின் 55-வது திரைப்படம் உளவுக்கதையாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தில் தனுஷ் உளவாளியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரில்லர் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் அடுத்ததாக லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
Actor Dhanush's 55th film is reportedly being developed as a spy story.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.