டாக்ஸிக் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!
டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...
நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் யாஷ் தனது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கீதா மோகன்தாஸ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என திடீரென அறிவிக்கப்பட்டது.
டீசர் ஏற்படுத்திய அதிர்வால் இப்படத்தின் வெளியீட்டுக்காக பலரும் காத்திருக்கின்றனர். நேரடியாக ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளதால் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், ஜூன் 4 வெளியீட்டிலிருந்து டாக்ஸிக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்ஷன்ஸ், விஜய்யின் ஜன நாயகன் படத்தையும் தயாரித்துள்ளனர். மே இறுதியில் ஜன நாயகனை வெளியிடுவதால் கூட டாக்ஸிக்கை ஒத்திவைத்திருக்கலாம் எனத் தெரிகிறது.