முகப்பு
செய்திகள்

ஜெயிலர் - 2 வெளியீட்டில் மாற்றம்?

ஜெயிலர் - 2 வெளியீடு குறித்து...

ஜெயிலர்
பகிர்:

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாள்களுக்கும் மேல் கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

ரஜினியுடன் பல நட்சத்திர நடிகர்களும் இணைந்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் இந்தியளவில் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் மாத வெளியீடாகத் திரைக்கு வர இருந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் ஜெயிலர் - 2 படத்தை செப்டம்பர் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ரஜினி - கமல் படத்தின் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

Reports indicate that there has been a change in the release of the film Jailer 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments