தீபாவளி வெளியீடாக ஜெயிலர் - 2?
ஜெயிலர் - 2 வெளியீடு குறித்து...
நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் தீபாவளி வெளியீடாகக் கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனராம்.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காட்சிகளில் திருப்தி இல்லாததால் இயக்குநர் நெல்சன் மேலும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு சென்னை பனையூரிலுள்ள ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
படப்பிடிப்பின் போது சில நாள்களுக்கு முன் வீடு போன்ற செட் அமைப்பில் மின்விசிறியை மாட்டும்போது, சேலத்தைச் சேர்ந்த 28 வயதான கார்த்திகேயன் என்கிற இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், ஓரிரு நாள்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்த ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் தீபாவளி வெளியீடாகக் கொண்டு வரத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Plans are reportedly underway to release actor Rajinikanth's Jailer 2 for Diwali.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.