தனுஷ் படப்பிடிப்பை முடித்த மம்மூட்டி!
தனுஷ் - 55 படம் குறித்து...
நடிகர் மம்மூட்டி தனுஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில், நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க, நடிகர் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்பட்டது. நீண்ட காலம் கழித்து மம்மூட்டி தமிழ் படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தனுஷ் - 55 படத்தின் தனக்கான படப்பிடிப்பை நடிகர் மம்மூட்டி நிறைவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
eports indicate that actor Mammootty has completed the filming of the Dhanush movie.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.