பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணையும் மகாநதி சீரியல் நடிகை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மகாநதி தொடர் நடிகை சாத்திகா.
மகாநதி தொடரில் நடித்து பிரபலமான நடிகை சாத்திகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புதிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து தற்போது கதை நகர்கிறது.
Advertisement
Advertisement
பிரியா தம்பி திரைக்கதை, வசனம் எழுத டேவிட் சார்லி பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடரை இயக்குகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் 600 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருவதுடன், டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது.
முதல் பாகத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன், ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ் இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகத்தில் நடிகை நிரோஷா, வி.ஜே.தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் புதிய பாத்திரத்தை தொடர் குழு அறிமுகம் செய்துள்ளது. அஞ்சலி என்ற புதிய பாத்திரத்தில் நடிகை சாத்திகா நடிக்கிறார்.
நடிகை சாத்திகா மகாநதி தொடரில் ராகினி பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர். பாண்டியன் ஸ்டோரில் நடிகை சாத்திகாவின் வருகை தொடரில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை சாத்திகா நான் மகான் அல்ல, வேழம், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Sathika, who gained popularity by acting in the Mahanadhi serial, is now acting in a new role in the Pandian Stores serial.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.