முகப்பு
செய்திகள்

தியாகராஜன் குமாரராஜா - விஜய்சேதுபதி கூட்டணி..! ஜப்பானிலும் வெளியாகும் பாக்கெட் நாவல்!

பாக்கெட் நாவல் திரைப்படம் ஜப்பானிய மொழியில் வெளியாவது குறித்து...

Updated On : 20 பிப்ரவரி 2026, 7:51 pm IST
பகிர்:

நடிகர் விஜய்சேதுபதியின் “பாக்கெட் நாவல்” திரைப்படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் “பாக்கெட் நாவல்”.

இந்த நிலையில், “பாக்கெட் நாவல்” திரைப்படம் ஜப்பானிய மொழியிலும் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஜப்பான் நாட்டில் வெளியாகும் எனவும் படக்குழு இன்று (பிப். 20) அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் (TDKF) மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கின்றார்.

நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2018- இல் வெளியான இக்கூட்டணியின் “சூப்பர் டீலக்ஸ்” படத்திற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Vijay Sethupathi's film "Pocket Novel" will also be released in Japanese.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.