முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்க்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா டீசர்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “டெக்ஸ்லா” பட டீசர் வெளியீடு...

Updated On : 27 பிப்ரவரி 2026, 9:20 pm IST
பகிர்:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “டெக்ஸ்லா” திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு “டெக்ஸ்லா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தை, தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், புதுமையான கதைகளத்துடன் உருவாகும் “டெக்ஸ்லா” திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை (பிப். 27) வெளியிட்டுள்ளனர்.

சினிமா பாரடைசோ, தி லாஸ்ட் ஷோ போன்ற படங்களின் பாணியில் சினிமா மீதான சிறுவன் ஒருவனின் ஈர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

summary

The title teaser of Aishwarya Rajinikanth's film "Texla" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.