முகப்பு
செய்திகள்

டாக்ஸிக் முதல் பாடல் எப்போது? கியாரா அத்வானி வெளியிட்ட போஸ்டர்!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தின் முதல் பாடல் குறித்து...

Updated On : 28 பிப்ரவரி 2026, 11:23 am IST
டாக்ஸிக் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / கியாரா அத்வானி.
பகிர்:

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தின் முதல் பாடலின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலில் யஷ் உடன் கியாரா அத்வானி நடித்திருப்பதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தில் நடிகர் யஷ் உடன் நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், டாரா சுதாரியா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் படத்துக்கான கதையை யஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மார்ச் 19ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

கன்னடம், ஆங்கிலத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்தப் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.

விஷால் மிஸ்ரா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் மார்ச் 2ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டரைப் பகிர்ந்த கியரா அத்வானி, “டாக்ஸிக் உலகத்தில் பாதுகாப்பான அணைப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

The poster of the first song of the film Toxic, starring actor Yash, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.