FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல் வெளியீடு!

கராத்தே பாபு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

Updated On : 12 ஜூன் 2026, 6:27 pm IST
கராத்தே பாபு படத்தில் ரவி மோகன் - youtube
பகிர்:

நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ள “கராத்தே பாபு” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் கே பாபு மற்றும் நடிகர் ரவி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “கராத்தே பாபு”. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் அரசியல்வாதியாக நடித்துள்ள கராத்தே பாபு படத்தின் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், கே.எஸ். ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, டாவ்டி எஸ் ஜிவால், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தில் பாடகி மீனாட்சி இளையராஜா வரிகள் எழுதி பாடியுள்ள “ராசாதி ராசா” எனும் முதல் பாடல் இன்று (ஜூன் 11) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

summary

The first song from the movie "Karatey Babu," starring actor Ravi Mohan as the lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments