முகப்பு
செய்திகள்

இதயம் தொடரில் இணையும் சக்திவேல் சீரியல் நடிகர்!

இதயம் தொடரில் இணையும் சக்திவேல் சீரியல் நடிகர் மெர்வென் பாலாஜி குறித்து...

Updated On : 4 ஜூலை 2026, 3:48 pm IST
மெர்வென் பாலாஜி - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரின் இரண்டாவது பாகத்தில் நடிகர் மெர்வென் பாலாஜி இணைந்துள்ளார்.

இதயம் தொடரின் முதல் பாகத்தில் நடிகை ஜனனி அசோக் குமார் நாயகியாக நடித்த நிலையில், தற்போது பல்லவி கெளடா நாயகியாக நடித்து வருகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் பிரதான பாத்திரங்களில் ரிச்சட் கோஷ், பல்லவி கெளடா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

விபத்தில் திடீரென மரணமடையும் பாரதியின் கணவனின் இதயத்தைப் பெற்று மறுவாழ்வு பெறுகிறார் ஆதி. இதனைத் தொடர்ந்து ஆதிக்கும் பாரதிக்கும் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. இவர்களின் வாழ்க்கையைச் சுற்றி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 2023 முதல் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரின் முதல் பாகம் 650 எபிசோடுகள்வரை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது பாகம் எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், இதயம் தொடரில் மெர்வென் பாலாஜி, ஆனந்த் என்ற பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவரின் வருகை, தொடரின் கதையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சக்திவேல் தொடரில் பிரபலமானவர். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்திரா உள்ளிட்ட பல முன்னணி தொடர்களில் நடித்துள்ளார்.

summary

Actor Mervin Balaji has joined the second season of the serial Idhayam, which is being aired on Zee Tamil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments