பெரும் பேசுபொருளான ராம் சரணின் பெத்தி படத்தின் ஓடிடி வெளியீடு!
நடிகர் ராம் சரணின் பெத்தி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி...
நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து வெளியான “பெத்தி” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் “பெத்தி”. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், இப்படம் ரூ. 400 கோடி வரை வசூல் செய்ததாகப் படக்குழு அறிவித்தது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருந்தார். மேலும், நாயகி ஜான்வி கபூர் மிகவும் கவர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் விமர்சித்ததை ஏற்று இயக்குநர் புச்சி பாபு மன்னிப்பு கோரினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பெத்தி திரைப்படம் வரும் ஜூலை 9 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
actor Ram charan's Peddi movie ott release
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.