முகப்பு
செய்திகள்

மூன்று முடிச்சு தொடரில் நடிக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்!

மூன்று முடிச்சு தொடரில் நேரலை நிகழ்ச்சித் தொகுப்பாளர் துரை ராஜ் நடித்து வருவது குறித்து...

Updated On : 6 ஜூலை 2026, 4:38 pm IST
மூன்று முடிச்சு படப்பிடிப்பில் துரை ராஜ் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

மூன்று முடிச்சு தொடரில் பிரபல தொகுப்பாளர் துரை ராஜ் நடித்து வருகிறார். தொலைக்காட்சிகளில் நேரலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்த இவர், தற்போது நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக குணச்சித்திர பாத்திரங்கள் மற்றும் வில்லன் பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் அதிகம் ஆர்வமுடையவராக உள்ளார்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இவர்களுடன் பாரதிராஜாவின் தம்பி தேனி முருகன், ப்ரீத்தி சஞ்சீவ், பிரபாகரன் உள்ளிட்ட பலரின் நடிப்பும் மூன்று முடிச்சு தொடருக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

கிராமத்தில் தந்தையுடன் வளர்ந்த பெண், கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனை திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன்பிறகு, அக்குடும்பத்தில் நாயகி தனது கண்வருடன் சேர்ந்து சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது இத்தொடரில் அடிக்கடி புதிய பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடிகை சஹானா அறிமுகமான நிலையில், தற்போது துரை ராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

யார் இந்த துரை ராஜ்?

சின்ன திரையில் நேரலை நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். படிப்படியாக நடிப்பதற்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்ட இவர், 2021-ல் ஒளிபரப்பான அன்பே வா தொடரில் நடித்தார்.

பின்னர் 2015 ஆம் ஆண்டு கைராசி குடும்பம் தொடரில் நடித்து, அதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து யாரோ என்ற படத்திலும் நடித்தார். தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ள துரை ராஜ், மூன்று முடிச்சு தொடரில் நடித்து வருகிறார்.

summary

Famous anchor acting in the Moondru Mudichu serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments