மகள் திருமணத்துக்கு குஷ்பு என்னை அழைக்கவில்லை! ராதா ரவி
குஷ்பு மகள் திருமணத்தில் பங்கேற்காதது குறித்து ராதா ரவி விளக்கம்...
நடிகை குஷ்பு அவரின் மகள் திருமணத்துக்கு தன்னை அழைக்கவில்லை என்று நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி - நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசன் ஜோடிக்கு கடந்த ஜூன் 25 ஆம் தேதி கோவாவில் மிகக் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களும் இந்த மண விழாவில் பங்கேற்றிருந்தனர். சிரஞ்சீவி, நாகார்ஜுன், வெங்கடேஷ், அமலா அகினேனி, ஜேக்கி ஷ்ரோப், அனில் கபூர் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த திருமண விழாவில் பங்கேற்காதது குறித்து நடிகர் ராதா ரவியிடன் தனியார் யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ராதா ரவி, என்னை அவர்கள் திருமணத்துக்கு கூப்பிடவில்லை என்பதால் செல்லவில்லை என்று தெரிவித்தார். இந்த பேட்டி தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
ராதா ரவி பேசியதாவது:
”என்னை அவர்கள் கூப்பிடவில்லை, அதனால் நான் போகவில்லை. கோவாவில் திருமணம் நடத்தினார்கள். அவர்கள் லெவல் பெரிதானதால் கூப்பிடவில்லை என நினைக்கிறேன். மதுரை தொகுதியில் சுந்தர் சி போட்டியிட்டபோது, அவரை நான் வாழ்த்தி அனுப்பினேன்.
அவர்கள் தேர்வு செய்து சிலரை மட்டும் கூப்பிட்டார்களா என்பது தெரியவில்லை. ஒருவேளை அழைத்திருந்தால் சென்றிருப்பேன். ஒருவேளை தற்போது அவர்களுக்கு நான் தேவையில்லை போல. அரசியலில் நிற்கும்போது வாக்குக்காக என்னை அணுகியிருப்பார்கள் என நினைக்கிறேன். சம்பந்தம் இல்லாதவர்களை எல்லாம் திருமணத்துக்கு அழைத்துள்ளார்கள். சுந்தர் சி என்னை கூப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன்.
ஒருமுறை படப்பிடிப்பில் குஷ்பு மயக்கம் அடைந்தபோது நான் தான் மருத்துவமனையில் அனுமதித்தேன். அதையெல்லாம் அவர்கள மறந்துவிட்டார்கள். ஏன் அழைக்கவில்லை என்று அவர்களிடம்தான் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Khushbu did not invite me to her daughter's wedding! – Radha Ravi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.