FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குஷ்பு மகள் திருமணத்தில் பலரும் கவனித்த ஒரு விஷயம் இதுவா? ஆச்சரியம்

குஷ்பு மகள் திருமணக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களைப் பார்த்த பலரும் இந்த விஷயத்தை மட்டும் கவனித்திருக்கிறார்கள்.

குஷ்பு மகள் திருமணம் - From video grab
பகிர்:

நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், குஷ்பு பகிர்ந்த ஒரு விடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நடிகை குஷ்பு, மகள் திருமணத்தில் எடுத்தப் புகைப்படங்கள் விடியோக்களின் தொகுப்பை பகிர்ந்து வருகிறார். நேற்று அவர் பகிர்ந்த ஒரு விடியோவில், திருமணச் சடங்கு, அரங்கம், விருந்தினர்களின் விடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் பல விஷயங்களை அவரது ரசிகர்கள் கவனித்து அது குறித்து பதிவிட்டு வருகிறார்கள். அதாவது, குஷ்பு மகள் திருமணத்தில் இரண்டு தாலிகள் இருந்தது. முதலில் மஞ்சள் கயிறுடன் இருக்கும் தாலியை எடுத்து மணமகன் மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டினார். பிறகு, தங்கச் சங்கிலியால் ஆன தாலியை மணமகளுக்கு அணிவித்ததோடு அவர் கண்கலங்கியதும் விடியோவாக பதிவாகி வைரலாகியிருந்தது.

Advertisement

Advertisement

பலரும் அவரைத் தேற்றிய நிலையில், தாலி கட்டும்போது பொதுவாக மணமகள்தானே கண் கலங்குவார் என்றும், மணமகன் கண் கலங்கியதால் உண்மையான அன்பின் வெளிப்பாடு என்றும் கருத்துகள் குவிந்துள்ளன.

அந்த விடியோவில், மணமகள் தவிர, முக்கிய பிரபலங்கள் அனைவருமே தங்க நிற உடையில் இருக்கிறார்கள். பொதுவாக மணமக்கள் தான் தனித்த நிற ஆடை அணிவார்கள். ஆனால், இங்கு மணமகனும் அதே தங்க நிற ஆடையில் ஜொலிக்க, மணமகள் அவந்திகா மட்டும் வெளிர்சிவப்பு நிற ஆடையில் தேவதைப் போல வருகிறார்.

ஒட்டுமொத்த விருந்தினர்களும் எவ்வாறு தங்க நிற ஆடையில் வந்தனர். குஷ்பு அழைப்பிதழ் கொடுக்கும்போதே சொல்லிவிட்டாரா என்று கேள்விகள் எழுகின்றன. சமூக வலைத்தளத்தில் இது பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் தன்னுடைய மனைவி பூர்ணிமாவுடன் இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்றிருந்தார். ஆனால், அடுத்த ஒரு சில நாள்களில் அவர் உலகை விட்டுப் பிரிந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

குஷ்பு வீட்டு வளர்ப்பு நாயும் மணமேடையில் மணமகளுடன் அமர்ந்திருந்ததும், தாலி கட்டும் சடங்கின்போது, அவந்திகாவின் தாய் மற்றும் தங்கை இருவரும் உணர்ச்சிவசப்பட்டதும் விடியோவில் பதிவாகியுள்ளது.

அவந்திகா திருமணம் என்று தேதி வெளியானதுமே, முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. முன்தினமே மீம்ஸ்களும் பறந்தன. ஆனால், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால் முதல்வர் விஜய் பங்கேற்கவில்லை. கோவாவில் திருமணம் முடிந்து அடுத்து சென்னையில் மிகப் பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடைபெறவிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Many people who viewed the photos of Khushbu's daughter's wedding celebrations noticed this one particular detail.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments