ரூ. 30 கோடி வசூலித்த பாலன் திரைப்படம்!
பாலன் திரைப்படத்தின் வசூல் குறித்து...
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான பாலன் தி பாய் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கிய “பாலன் தி பாய்” திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னணி கதாபாத்திரங்களில் ஆதிசேஷன், ஃபர்ஹானா பளதிங்கள் நடிக்க இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்த இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உருவாக்க ரீதியாகவும் திரை எழுத்தாகவும் நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாகப் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 31 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் கேரளத்தில் ரூ. 18 கோடியை ஈட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வெளியான நாள் முதல் கடந்த 17 நாள்களாக கேரள திரையரங்குகளில் வசூலில் முதலிடத்திலும் இப்படம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Information regarding the box office collection of the film Balan the Boy, directed by Chidambaram, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.