முகப்பு
செய்திகள்

விஷாலின் மகுடம் பட டீசர் வெளியானது!

விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் டீசர் இன்று வெளியானது.

Updated On : 11 ஜூன் 2026, 6:18 pm IST
விஷால்
பகிர்:

விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் டீசர் இன்று வெளியானது.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இப்படத்தை இயக்குவதாக முதலில் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் துவங்கியது. ஆனால், அவர் படத்திலிருந்து விலகியதாகவும், விஷாலே படப்பிடிப்பை நடத்துவதாகவும் கூறப்பட்டது. பின்னர் வெளியான டீசர் அறிவிப்பில், விஷால் இப்படத்தை இயக்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

மகுடம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

summary

The teaser of Vishal's film Magudam is out today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.