கௌதம் ராம் கார்த்திக் - 19 பெயர் டீசர் அப்டேட்!
கௌதம் ராம் கார்த்திக் திரைப்பட அப்டேட்...
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடித்த அவரது 19-வது திரைப்படத்தின் பெயர் டீசர் தேதி வெளியாகியுள்ளது.
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தன் 19-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்க, டாடா திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு வழங்குகிறார்.
அரசியல் பின்னணியில் உருவாகிவரும் இப்படம் தேர்தலுக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் பெயர் டீசரை வருகிற மார்ச் 6 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
gautham ram karthik's 19th movie title teaser will release soon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.