துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!
துரந்தர் - 2 திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியது குறித்து...
அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘துரந்தர் தி ரிவென்ஞ்’ திரைப்படத்தை பிரபல நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்த திரைப்படம் துரந்தர். இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் தி ரிவென்ஞ்’ கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கோடிக்கணக்கில் வசூலைக் குவித்து வரும் ‘துரந்தர் தி ரிவென்ஞ்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் திங்கள்கிழமை (மார்ச் 23) பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து, தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ள பதிவில்,
“என்னவொரு படம், ரன்வீர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ‘துரந்தர் தி ரிவென்ஞ்’ படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leading actor of Tamil cinema, Rajinikanth, has praised the recently released and widely acclaimed film 'Dhuranthar The Revenge'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.