வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் திவ்ய பாரதி!
திவ்ய பாரதி குறித்து...
நடிகை திவ்ய பாரதி திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. பேச்சுலர் வெற்றிக்குப் பின் தமிழில் பெரிய நாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. முகன் ராவுடன் ’மதி மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்தார். தெலுங்கில் ’பாகல்’ படத்தை இயக்கிய நரேஷ் குப்பிலியின் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னையால் திவ்ய பாரதி விலகினார். தொடர்ந்து, இயக்குநரும் வெளியேறினார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, மகாராஜா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார்.
தற்போது, சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையே திவ்ய பாரதிக்கு ஏற்பட்டுள்ளது. அழகான தோற்றத்தில் இருந்தாலும் சில காரணங்களால் அவருக்கான வாய்ப்புகள் வேறு சில நடிகைகளுக்குச் சென்றுவிடுகின்றன. ஆனால், தொடர்ந்து தன் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
actor divya bharathi waits good opportunity in cinema
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.