தயாரிப்பாளரான நடிகர் ரியோ ராஜ்..! படத் தலைப்பு விடியோ!
நடிகர் ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் குறித்து...
நடிகர் ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் தலைப்பு அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. இன்று மாலை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகவிருக்கிறது.
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ரியோ ராஜ். தற்போது ’ரிவர் ரூட் ஸ்டூடியோஸ்’ மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.
தொகுப்பாளராக இருந்த ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தின் மூலம் 2019ல் கதாநாயகனாக அறிமுகமாறினார். பின்னர், ஜியோ, ஸ்வீட் ஹார்ட், லவ் மேரேஜ், ஆண் பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
Advertisement
தற்போது, ராமின் லீலா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ’ப்ரௌன் மணி’ என்ற படத்தினை தயாரித்து வருகிறார். இதன் படத்தலைப்பு அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ராம்நிஷாந்த், ஜே.எஸ். கவி, சுந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் முதல் பார்வை போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது.