முகப்பு
செய்திகள்

என்னவொரு பிறந்த நாள் பரிசு! த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா!

த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா....

த்ரிஷா, ராதிகா
பகிர்:

நடிகை த்ரிஷாவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளிலும் அதிக வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதால் இரண்டு தொகுதிகளிலும் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்சியைப் பிடிப்பதற்கான போட்டியில் வலுவான முன்னிலை பெற்றிருப்பதால் விஜய்க்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையே, நடிகை த்ரிஷா தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரை வாழ்த்திவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இந்த நிலையில், த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை ராதிகா சரத்குமார் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், “என்னவொர் பிறந்த நாள் பரிசு” எனக் கூறியுள்ளது வைரலாகியுள்ளது.

இது விஜய்யின் வெற்றியைக் குறிப்பிட்டு சொல்லியிருப்பதால் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Actress Radhika Sarathkumar has congratulated actress Trisha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.