விஜய்யைத் தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!
9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றது தொடர்பாக...
தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்றப் பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்துவைத்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
அவர்களுக்கும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் முக்கிய கோப்புகளில் கையொப்பமிடவுள்ளதாகவும் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.
After assuming office as the Chief Minister of Tamil Nadu, nine individuals took oath as ministers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.