கடவுள் அவதாரம்... சூர்யாவின் கருப்பு டிரைலர் வெளியானது!
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான கருப்பு படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான கருப்பு படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’கருப்பு’.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக, படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன.
கருப்பு திரைப்படம் மே 14 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பானதால் பட வெளியீடு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் படம் சொன்ன தேதியில் வெளியாகும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருந்தார்.
படத்தின் டிரைலர் இன்று வெளியாவதாக அறிவிப்பு வெளியான நிலையில் ப்ரமோஷனுக்காக ஐபிஎல் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்கு சூர்யா, சாய் அபயங்கர், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் சென்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கருப்பு படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. படம் மே 14 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.
The 'Karuppu' trailer has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.