என் வாழ்க்கையை மாற்றியவர் சூர்யா! ஆர்.ஜே. பாலாஜி நெகிழ்ச்சி!
என் வாழ்க்கையை மாற்றியவர் சூர்யா என்று கருப்பு திரைப்படத்தின் வெற்றி குறித்து ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தது பற்றி...
என் வாழ்க்கையை மாற்றியவர் சூர்யா என்று கருப்பு திரைப்படத்தின் வெற்றி குறித்து ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான படம் கருப்பு. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சூர்யாவின் படங்களிலேயே அதிகமாக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. உலகளவில் இதுவரை, சுமார் ரூ.330 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. சூர்யாவுக்கு மட்டுமல்லாமல் ஆர்.ஜே. பாலாஜிக்கும் மிகப்பெரிய படமாக கருப்பு அமைந்துள்ளது.
இதுகுறித்து ஆர்.ஜே. பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
முதல் நாளிலிருந்து என்னை நம்பினீர்கள் (சூர்யா). அந்த ஒரு நம்பிக்கை கனவை நனவாக்கியுள்ளது. அந்த ஒரு ஆதரவு, என் வாழ்வில் புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. தொடக்கத்தில், இது வெற்றிப்படமாக மாறும் என்று நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதி தற்போது உண்மையாகியுள்ளது.
நீங்கள் ஒருவர் இல்லாமல் இது எதுவுமே சாத்தியமில்லை. என்றென்றைக்கும் என் வாழ்க்கையையே மாற்றி இருக்கிறீர்கள். உங்கள் மீது எப்போதும் அன்பு வைத்துள்ளேன்.
நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக நான் என்றென்றும் பாதுகாக்கும் அழகான உறவாக நமது உறவு அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
RJ Balaji has spoken about the success of the film karuppu, describing it as a project that changed his life.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.