1000 நாள்களைக் கடந்த சிறகடிக்க ஆசை தொடர்!
சிறகடிக்க ஆசை தொடர் 1000 நாள்களைக் கடந்துள்ளது குறித்து....
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 1000 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, இல்லத்தரசிகள் மட்டுமின்றி அனைத்து தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கும் தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது.
கூட்டு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் இந்தத் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். இந்தத் தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த 2023 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடர் 1000 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இது தொடர்பாக, தொடர் குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
சிறகடிக்க ஆசை தொடர் குழுவுக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் டிஆர்பி புள்ளிகளில் சிறகடிக்க ஆசை தொடர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The series Siragadikka Aasai, currently airing on Vijay TV, has surpassed 1,000 days of broadcasting.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.