காஞ்சனா - 4 படத்தின் போஸ்டர்!
காஞ்சனா - 4 புதிய போஸ்டர்...
காஞ்சனா - 4 திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.
குறிப்பாக, நடிகர் சரத்குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து, காஞ்சனா - 2 படத்தை எடுத்தார். அதுவும் வணிக வெற்றியை அடைந்தது.
Advertisement
Advertisement
பின், 2019-ல் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெற்றிப்படமானது.
தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணை தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் காஞ்சனா - 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதில், நடிகர்கள் ஆனந்த் ராஜ், கருடராம், நோரா ஃபதேகி, ஹிமா பிந்து, ஸ்வாக்ஷா ஐயர், தேவ தர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். போஸ்டரில், காஞ்சனா - 4 விரைவில் வெளியாகவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
A new poster for the movie Kanchana 4 has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.