நடிகர் கார்த்தியின் மார்ஷல் போஸ்டர்!
மார்ஷல் முதல் பார்வை போஸ்டர்...
நடிகர் கார்த்தியின் மார்ஷல் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் மார்ஷல் என்கிற திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
இதற்கான, கார்த்தியின் தோற்றம் மற்றும் படப்பிடிப்பு விடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின. 1960 காலகட்டங்களில் நடந்த கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாகவும் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக இப்படம் திரைக்கு வருமென இயக்குநர் தமிழ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மார்ஷல் திரைப்படத்தின் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், கார்த்தியின் தோற்றம் கவனம் ஈர்த்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
A new poster for actor Karthi's film Marshal has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.