FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 வசூல் எவ்வளவு?

சர்தார் - 2 வசூல் குறித்து...

15 செப்டம்பர் 2026, 4:11 pm IST
சர்தார் 2 படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / பிரின்ஸ் பிக்சர்ஸ்
பகிர்:

நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்ட சர்தார் 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்களையே பெற்றதால் வணிக ரீதியாக பாய்ச்சலை நிகழ்த்தவில்லை. இதனால், இப்படம் இதுவரை ரூ. 18 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரூ. 80 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பின்னடைவையே சந்தித்துள்ளது.

nformation regarding the box office collection of actor Karthi's film Sardar 2 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments