நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார்!
நடிகர் முத்துக்காளை மனைவி மறைவு...
பிரபல நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான முத்துக்காளை வடிவேலு உள்பட பல நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்துள்ளார். கல்வியில் ஈடுபாடு கொண்ட இவர் சில பட்டங்களையும் பெற்றுள்ளார்.
சென்னையில் குடும்பத்துடன் வசித்துவரும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
சிகிச்சைக்காக பலரிடம் உதவி கோரிய முத்துக்காளை இறுதியாகத் தமிழக முதல்வர் விஜய்யிடம் உதவி கோரி விடியோ ஒன்றை வெளியிட்டார். உடனடியாக, அமைச்சர் ராஜ்மோகன் முத்துக்காளையைச் சந்தித்து அவரது மனைவியின் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில், 19 நாள்களாக சிகிச்சையில் இருந்த மாலதி இன்று காலை உயிரிழந்தார். முத்துக்காளையி மனைவி மறைந்த செய்தி பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச்சடங்களுக்காக மாலதியின் உடலை சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு செல்கின்றனர்.
Popular actor Muthukalai's wife passed away after failing to respond to treatment.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.